புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 6 டிசம்பர் 2018 (11:16 IST)

தேர்தலில் 'சீட்' தராததால் பெட்டியை கட்டிய ரம்யா!

பிரபல கன்னட நடிகை ரம்யா, இவர் தமிழில் குத்து, பொல்லாதவன், கிரி உள்ளிட்ட பல படஙகளில் நடித்துள்ளார்.



பல கன்னட படங்களிலும், தெலுங்கு படங்களிலும் ரம்யா நடித்துள்ளார். இவர் கடந்த 2013ம் ஆண்டு திடீரென காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அந்த ஆண்டு மாண்டியா தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்பி ஆனார். ஆனால் 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். 
 
இந்நிலையில் ரம்யா, காங்கிரஸ் கட்சி சார்பில் இணையதளங்களில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் செயல் திட்டங்களை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் சில  மாதங்களாக அரசியலில் ஆர்வம் காட்டுவதை குறைக்க ஆரம்பித்த ரம்யா, திடீரென மாயமானார்.  பின்னர் டுவிட்டரில் வந்து நான் மாயமாகவில்லை. அமெரிக்காவில் இருப்பதாக கூறினார். தற்போது ரம்யா மாண்டியாவில் வசித்த வீட்டை திடீரென்று காலி செய்து வெளியேறியுள்ளார். மாண்டியாவில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் அவர் போட்டியிட காங்கிரஸ் கட்சி டிக்கெட் வழங்கவில்லை. இதனால் விரக்தியில் இருந்த அவர் வீட்டை காலி செய்ததாக தகவல் வெளியாகியது.