வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (12:19 IST)

படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்: அதிரவைத்த பிரபல நடிகை

நடிகை ஒருவர் தன்னை தவறாக அழைத்த தயாரிப்பாளர் குறித்து பேசியுள்ளார்.
திரைத்துறையில் தற்போது நடிகைகள் தாங்கள் சந்தித்து வரும் பாலியல் தொல்லைகள் குறித்து வெளியே சொல்லி வருகின்றனர். 
 
இந்திர விழா, நான் அவனில்லை 2, குரு சிஷ்யன், அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஸ்ருதி மராதே. மராத்தி திரையுலகில் பிரபலமான இவர் தான் திரைத்துறையில் சந்தித்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து பேசியுள்ளார். 
பொதுவாகவே மக்களிடையே நடிகைகள் என்றாலே சொகுசாக வாழ்கிறார்கள் என்ற கருத்து இருக்கிறது. அது உண்மையல்ல. பட வாய்ப்பிற்காக தயாரிப்பாளர் ஒருவரை சந்தித்தேன். நார்மலாக தான் பேசிக்கொண்டிருந்தார். வாய்ப்பு தருகிறேன் ஆனால் நீ அட்ஜஸ்ட் பண்ண வேண்டும் என கூறினார்.
 
வாய்ப்புக்காக நடிகை தயாரிப்பாளருடன் படுக்கையை பகிர்ந்தால், அதே வாய்ப்பிற்காக ஹீரோ யாருடன் படுக்கையை பகிர்வார் என கேள்வி கேட்டேன். அந்த தயாரிப்பாளர் வாயே பேசவில்லை என கூறினார். ஆனால் கடைசி வரை அந்த தயாரிப்பாளர் யார் என்றே ஸ்ருதி மராதே கூறவில்லை.