கழற்றிவிட்ட காதலன்: தற்கொலை செய்து கொண்ட நடிகை யாசிகா

love
Last Modified வியாழன், 14 பிப்ரவரி 2019 (10:35 IST)
காதலன் தன்னை விட்டு பிரிந்து சென்றதால் நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபகாலமாக சீரியல் நடிகைகள், நடிகர்கள், துணை நடிகைகள், நடிகர்களின் தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போவதும், காதல் தோல்விகளுமே இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
 
இந்நிலையில் சீரியல்கள் மற்றும் சில படங்களில் நடித்திருக்கும் துணை நடிகை யாசிகா(21) என்பவர் தனது காதலர் அரவிந்துடன் சென்னை வடபழனியில் ஒரே வீட்டில் வசித்து வந்தார். கடந்த 4 மாதங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்த இவர்களுக்குள் சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டதாக தெரிகிறது.
act
 
இதனால் அரவிந்த் யாசிகாவை விட்டு பிரிந்து சென்றார். இதனால் மன வருத்தத்தில் இருந்த யாசிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். யாசிகா இறப்பதற்கு முன்னர் தன்னை ஏமாற்றிய அரவிந்துக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென, தனது தாயாருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார். இந்த மரணத்தில் வேரேதும் மர்மம் உள்ளதா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :