வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 20 மார்ச் 2023 (11:51 IST)

பணம் தான் முக்கியம் பாதியில் சென்ற காதலன் - கதறி அழுத ஆத்மிகா!

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
 
அதைத்தொடர்ந்து வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பெரிதாக வாய்ப்பு கிடைத்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்க மாஸ்டர் பிளான் போட்ட ஆத்மிகா உடல் எடையை குறைத்து வித விதமான போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களின் பார்வையிலே இருந்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்போது தான் காதலித்த நபர் தன்னை விட்டு சென்றதாகவும் அதை நினைத்து நினைத்து இரவு முழுக்க அழுததாகவும் கூறி மனம் வருந்தியுள்ளார். அந்த பேட்டியில்,  வாழ்க்கையில் பணமா? அல்லது புகழா? முக்கியம் என யாரவது என்னிடம் கேட்டால், நிச்சயம் பணம் தான் என்று கூறுவேன். ஏனென்றால் அதுதான் எதார்த்தம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்'  என்றார். மேலும், கொஞ்சம் கொஞ்சமா அந்த கஷ்டத்தில் இருந்து மீண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.