1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2024 (07:22 IST)

மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்பட நடிகரை மணக்கும் அபர்ணா தாஸ்!

மலையாள சினிமாவில் ஞான் பிரகாசன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் அபர்ணா தாஸ். அங்கு பல படங்களில் நடித்து வந்த அவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆக்கியது பீஸ்ட் திரைப்படம். அந்த திரைப்படத்தில் செகண்ட் ஹீரோயினாக அவர் நடித்திருந்தார்.

அதையடுத்து அவர் கதாநாயகியாக நடித்த டாடா திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்த்து. இப்போது கதாநாயகியாக பல படங்களில் நடித்து வரும் அவர் மலையாள நடிகரான தீபக் பரம்போலை வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளார்.

தீபக் பரம்போல் சமீபத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டான மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.