1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 7 மார்ச் 2023 (08:27 IST)

கொடூரமாக தாக்கிய காதலர்… புகைப்படத்தை வெளியிட்ட அனிகா விக்ரமன்!

மலையாள சினிமாவில் சில கதாபாத்திரங்களில் நடித்துள்ள அனிகா விக்ரமன், தமிழ் சினிமாவிலும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் கே மற்றும் விஷமக்காரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் தன்னுடைய வீங்கிய முகத்தோடு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. அதில் அவர் தன்னுடைய காதலர் அவரைக் கொடூரமாக தாக்கியதாக குற்றச்சாட்டை வைத்துள்ளார். முன்னாள் காதலரான அனூப் பிள்ளை உடலளவிலும் மனதளவிலும் தன்னை கொடுமைப் படுத்தியுள்ளதாகவும், இதுபற்றி போலீஸில் புகாரளிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும அவர் அனூப், தன்னுடைய போனை உடைத்துவிட்டதாகவும், முன்பே அவர் மேல் பெங்களூரில் புகாரளித்தாலும், அவர் மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.