வட சென்னை படத்தில் அமலாபாலுக்கு பதில் ஐஸ்வர்யா ராஜேஷ்?


Murugan| Last Modified செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (19:45 IST)
இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தில் இருந்து நடிகை அமலாபால் விலகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 

 
வட சென்னை படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. முதலில் அப்படத்தில் நடிகை சமந்தா நடிப்பதாக இருந்தது. அதேபோல், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின் சமந்தா விலக, அவருக்கு பதில் அமலாபால் நடிக்கிறார் எனக் கூறப்பட்டது.
 
ஆனால், அதன்பின் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. நடிகர் தனுஷ், கொடி படத்தில் நடிக்க சென்று விட்டார். மேலும், வேலை இல்லா பட்டதாரி 2ம் பாகத்திலும் நடித்து வந்தார். அதேபோல், ராஜ்கிரணை கதாநாயகனாக வைத்து பவர் பாண்டி படத்தையும் இயக்கினார். தற்போது அந்த இருபடங்களும் முடிந்து விட்டன. ப.பாண்டி வெளியாகி விட்டது. விஐபி-2 விரைவில் வெளியாக உள்ளது. எனவே, வடசென்னை படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.  ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக விஜய் சேதுபதி விலகி விட்டார்.


 

 
இந்நிலையில், இப்படத்தில் இருந்து அமலாபாலும் விலகிவிட்டதாக தெரிகிறது. அதேபோல், அவருக்கு பதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :