கைதியின் இந்தி ரீமேக்கில் அமலா பால்… படக்குழு செய்யும் அதிரடி மாற்றங்கள்!
கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கைதி திரைப்படம் இப்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை தமிழில் தயாரித்த எஸ் ஆர் பிரபுவே இந்தியிலும் ரிலையன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கிறார்.
கார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்கிறார். இந்தி பதிப்பில் தமிழில் நரேன் நடித்த கதாபாத்திரத்தை மாற்றி பெண் போலிஸ் அதிகாரியாக்கி அதில் தபுவை நடிக்க வைக்கின்றனர். இந்த படத்தை கதாநாயகனாக நடிக்கும் அஜய் தேவ்கனே இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அவர் இரண்டு படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இப்போது ஒரு முக்கிய கௌரவ வேடத்தில் அமலா பால் இந்த படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கதாநாயகனனின் மறைந்த மனைவி வேடத்தில் அவர் நடிப்பார் என சொல்லப்படுகிறது.