வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 16 அக்டோபர் 2020 (17:10 IST)

இருளில் தோன்றிய முழு நிலவு.. ஆத்மீகாவின் கருப்பு வெள்ளை புகைப்படத்தை வர்ணிக்கும் ரசிகர்கள்!

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதைத்தொடர்ந்து வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பெரிதாக வாய்ப்பு கிடைத்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்க மாஸ்டர் பிளான் போட்ட ஆத்மிகா உடல் எடையை குறைத்து வித விதமான போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களின் பார்வையிலே இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது Black & White போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனை வித விதமாக வர்ணித்துள்ள ரசிகர்கள் இரவில் தோன்றிய முழு நிலவு போன்று தேவதை போல் ஜொலிக்குறீங்க என ரசித்து ரசனையில் மூழ்கியுள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#Soul over #beauty