ஆண்களுடன் ஒப்பிட்டு மோசமான மீம்: கடுப்பான மீசைய முறுக்கு நடிகை

Last Updated: சனி, 9 மார்ச் 2019 (20:06 IST)
இசையமைப்பாளர், நடிகர் ஹிப் ஆப் ஆதியின் மீசைய முறுக்கு படத்தில் நாயகியாக நடித்தவர் ஆத்மிகா. இவர் அதனை தொடர்ந்து சில படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். 
 
இந்நிலையில், நேற்று மகளிர் தினம் கொண்டப்பட்ட நிலையில், இணையத்தில், சினிமாவில் ஆண் நடிகர்கள் பெண் வேடமிட்ட கதாபாத்திரங்களின் முகங்களை வைத்து ஆத்மிகாவின் புகைப்படத்தையும் சேர்த்து கிண்டலாக `பெண்கள் தின வாழ்த்துகள்’ என்று பதிவிட்டு ஒரு மீம் வெளியிட்டுள்ளனர். 
 
இதை பார்த்த ஆத்மிகா, அந்த பதிவிற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, இதுபோல் அசிங்கமான சிந்தனையோட உன்னைச் சிறு வயதிலிருந்து இப்படி வளர்க்கப்பட்டு இருக்கிறாயே என்று வருத்தப்படுகிறேன். 
 
கடவுள் எங்களைப் படைத்த விதத்தில் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஒவ்வொருவரும் அவரவர் விதத்தில் அழகுதான். ஆண்களை அவர்களின் தோற்றத்தை வைத்து நாங்கள் மதிப்பிடுவதில்லை. உங்களுக்கும் என் மகளிர் தின வாழ்த்துகள் என கூறியுள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :