வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Modified: செவ்வாய், 28 ஜனவரி 2020 (19:25 IST)

ரசிகரின் செல்போனை தட்டிவிட்ட நடிகர் ! வைரலாகும் வீடியோ

செல்போனில் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் பிரபல நடிகர் சல்மான் பறித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சிவக்குமாரருடன் ஒரு ரசிகர் செல்ஃபி எடுக்க முயன்போது அதை தட்டி விட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல், ஹிந்தி நடிகர் சயிப் அலிகான் விமான நிலையத்திற்கு வந்த போது, ஒரு ரசிகர் அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றதற்கு அவரது கோபமும் மீடியாக்களில் வைரல் ஆனது.
 
இந்த நிலையில், இன்று விமானா நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற சல்மான் கானுடன் ஒரு இளைஞர் ஒரு ஒரத்தில் செல்ஃபி எடுக்க முயற்சி செய்தார்.
 
அப்போது, சல்மான் இளைஞரின் செல்போனை தட்டிவிட்டார். இந்த வீடியோ வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதேசமயம் இளைஞருக்கு ஆதரவும் எதிர்ப்பு, தெரிவித்து நெட்டிசன்ஸ் கருத்து தெரிவித்து வருகின்றனர்.