கொரோனாவில் இருந்து குணமடைந்த நடிகர் விஷால்…
சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரொனா தொற்றினால் அனைத்து நாடுகளும் பெரும் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் பதிமூன்று லட்சம் மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் 31 ஆம் தேதி தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.
தமிழத்தில் இன்று மேலும் 6,988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனாவால் 20 நாட்களாகப் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் விஷால் இன்று பூரண குணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.