தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஷால்
விரைவில் நடைபெற உள்ள தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிடுகிறார். அவரை முன்மொழிந்து கமல் கையெழுத்திட்டுள்ளார்.
விஷால் தற்போது நடிகர் சங்க செயலாளராக உள்ளார். தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் அவர் வெற்றி பெற்றால், நடிகர் சங்க செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார்.
விஷால் அணியில் குஷ்பு பொருளாளர் பதவிக்கும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.