நடிகர் வித்தார்த்-காயத்ரி தம்பதிக்கு குழந்தை பிறந்தது


Sasikala| Last Updated: செவ்வாய், 20 ஜூன் 2017 (11:47 IST)
காக்கா முட்டை இயக்குநர்  மணிகண்டனிடம்  உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சுரேஷ் சங்கையாவின் முதல் படம், 'ஒரு  கிடாயின் கருணை மனு'. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிகர் விதார்த் நடித்தார். 

 
 
இப்படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கிறார் நடிகர் வித்தார்த். தற்போது இவருக்கு மேலும் மகிழ்ச்சியூட்டும் வகையில் ஒரு  நிகழ்வு நடந்திருக்கிறது. அதாவது இவருக்கும், காயத்ரிக்கும் (ஜுன் 19) நேற்று மாலை பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்கள்  இருவரும் 2015ம் ஆண்டு ஜுன் மாதம் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
குடும்பத்தின் புது வரவை கொண்டாடும் நடிகர் வித்தார்த்துக்கு திரையுலக பிரமுகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :