திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 25 மே 2024 (07:09 IST)

விமல் கருணாஸ் நடித்துள்ள ‘போகுமிடம் வெகுதூரமில்லை’ டிரெய்லர் எப்படி?

கடந்த சில ஆண்டுகளாக விமல் நடித்த படங்கள் எதுவும் பெரிதாக ஓடவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் விலங்கு வெப் சீரிஸ் ஓடியது. இந்நிலையில் இப்போது அவர் சீரியஸானக் கதையைக் கொண்ட போகுமிடம் வெகுதூரமில்லை எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வெற்றிமாறன் வழங்குகிறார்.

Shark 9 pictures சார்பில்  சிவா கில்லாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில்,   உருவாகியிருக்கும் திரைப்படம் "போகுமிடம் வெகு தூரம் இல்லை". விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந் நிலையில்  படத்தின் டிரைலர் இப்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

டிரைலரில் ஆம்புலன்ஸ் டிரைவரான விமலுடன் ஒரு கட்டத்தில் வித்தியாசமான தோற்றம் மற்றும் உடல் மொழி கொண்ட கருணாஸ் இணைகிறார். அவரால் ஏற்படும் பிரச்சனைகளை விமல் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை சொல்வது போல டிரைலர் செல்கிறது.