திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 27 டிசம்பர் 2022 (14:23 IST)

சூர்யா பொண்ணா இது அடையாளம் தெரியாமல் அழகா மாறிட்டாங்களே!

சூர்யா மகள் தியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்!
 
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் சூர்யா - ஜோதிகா தம்பதி காதலர்களின் சிறந்த ஜோடியாகவும் பார்க்கப்படுகின்றனர். உயிரிலே கலந்தது , மாயாவி , பேரழகன் , பூவெல்லாம் கேட்டுப்பார், காக்க காக்க , சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் சேர்ந்து நடித்து ரசிகர்ளின் பேவரைட் ஜோடியாக பார்க்கப்பட்டனர். 
 
பின்னர் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி இரு வீட்டில் உள்ள பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இவர்களுக்கு தியா , தேவ் என்ற மகள் , மகன் இருக்கின்றனர்.  
 
திருமணம் குழந்தைக்கு பிறகு சினிமாவிற்கு சில வருடங்கள் இடைவெளி விட்டிருந்த ஜோதிகா தற்போது மீண்டும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா குடும்பத்துடன் கிறித்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் தேவ், தியா இருவருமே நன்றாக வளர்ந்து ஆளே அடையலாம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளனர்.