வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (09:12 IST)

பிக்பாஸ் தொகுப்பாளராக கிடைத்த வாய்ப்பை நிராகரித்த முன்னணி நடிகர்!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் அனைத்து சீசன்களையும் இதுவரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். ஒரு சீசனில் இடையில் அவர் வெளியேறிய நிலையில் சிம்பு தொகுத்து வழங்கினார். இந்நிலையில் எட்டாவது சீசனில் இருந்து கமல்ஹாசன் தன்னுடைய சினிமா பணிகள் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக ரசிகர்களுக்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் நன்றி தெரிவித்து கமல்ஹாசன் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கமல்ஹாசன் நீண்ட சுற்றுலா ஒன்றை அமெரிக்காவில் மேற்கொள்ளவுள்ள நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது யார் என்ற கேள்வி அந்நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் இது சம்மந்தமாக தயாரிப்பு நிறுவனம் மூன்று பிரபல நடிகர்களை அணுகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் ஒருவரான சூர்யா அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டதாக சொல்லப்படுகிறது. இப்போது விஜய்சேதுபதி மற்றும் சிம்பு ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.