Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கனவிலும் நினைத்து பார்க்க முடியாத வாழ்க்கை இது - சிவகார்த்திகேயன் உருக்கம்


Murugan| Last Modified சனி, 4 பிப்ரவரி 2017 (17:35 IST)
சினிமாவில் நடிக்க வந்து 5 வருடங்கள் முடிந்து விட்ட நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

 

 
இதுபற்றி அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கதில் “ 2012ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி, என்னை நான் முதல் முறை பெரிய திரையில் பார்த்தேன்(மெரினா). பல அனுபவங்களுடன் இந்த 5 வருடங்களை கடந்துள்ளேன். நீங்கள் கொடுத்துள்ள இந்த வாழ்க்கை நான் கனவிலும் நினைக்காதது. என் மீது அன்பு செலுத்திய ரசிகர்கள், சகோதரர்கள், சகோதரிகள், என்னுடைய படக்குழுவினர்கள், சினிமா வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், அனைத்து நடிகர்கள், ஊடகங்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். முக்கியமாக, என் சினிமா பயணத்தை அறிமுகப்படுத்திய பாண்டிராஜ் அவர்களுக்கு சிறப்பு நன்றி.  
 
நான் செல்ல வேண்டிய தூரம் இன்னும் நிறைய  இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். நான் இன்னமும் கற்றுக் கொண்டிருக்கிறேன். கற்றுக் கொண்டே இருப்பேன். மக்களை மகிழ்விக்கும் சினிமாவை கொடுக்க நான் உழைத்துக் கொண்டே இருப்பேன். அனைவருக்கும் நன்றி. உங்களை நேசிக்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :