1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (17:21 IST)

பிக்பாஸ் சீசன் 4 தொகுப்பாளர் சிம்பு? விஜய் டிவி வெளியிட்ட அதிகராப்பூர்வ அறிவிப்பு!

இந்தி , தெலுங்கு , கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டு தமிழில் ஒளிபரப்பாகியது. உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றதையடுத்து சீசன் 2 , சீசன் 3 என தொடர்ச்சியாக கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார். 


 
இந்தி பிக்பாஸை தொகுத்து வழங்கி வரும் சல்மான் கானை அடுத்து கமல் தான் தொடர்ந்து அடுத்தடுத்து 3 சீசன்களையும் தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது இந்த சீசனும் முடியும் தருவாயில் உள்ளது. ஆனால்,  இந்த 3-வது சீசன் தான் கமல் தொகுத்து வழங்கும் கடைசி சீசன் என்று சமூக வலைத்தளங்ககளில் வைரலாக பேசப்பட்டது வருகிறது. அதுமட்டுமின்றி அடுத்த சீசனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கவுள்ளதாகவும் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. 
 
"பிக்பாஸ் 4 வது சீசனுக்கும் கமல் தான் தொகுப்பாளர் என்றும் வேறு யாரையும் நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை எனவும் விஜய் டிவி கூறியுள்ளதாக செய்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது . ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஒருவேளை இது உண்மையாக இருந்தால்  விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விஜய் தொலைக்காட்சியால் வெளியிடப்படும்.