Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிம்பிவிற்கு மீண்டும் ஏழரை - ஏஏஏ படப்பிடிப்பு ரத்து

Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (19:48 IST)

Widgets Magazine

நடிகர் சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


 

 
திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து இந்த படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகர் சிம்பு 3 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
 
இதில், மதுரை மைக்கேல் கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பு மட்டும் முடிவடைந்துள்ளது. அடுத்து அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்தில் அவர் நடிக்கும் காட்சிகள் தற்போது படம்பிடிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக படக்குழு தாய்லாந்தில் தங்கியிருந்து படப்பிடிப்பை நடத்தி வந்தனர். 


 

 
அதற்காக சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் சுமார் 20 பேர் தாய்லாந்திற்கு சென்றிருந்தனர். ஆனால், 20 நாட்களாக அவர்கள் அங்கு தங்கியும் 2 நாட்கள் மட்டுமே முழுமையான படப்பிடிப்பு நடத்தினார்களாம். இதனால், இப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாராம். உடனடியாக அவர்களை சென்னை திரும்பி வரும்படி கூறிவிட்டாராம்.
 
மேலும், தாய்லாந்தில் எடுக்க திட்டமிட்டிருந்த காட்சிகளை சென்னை மற்றும் ஹைதராபாத்தில் எடுக்க சொல்லி விட்டாராம். இதனால், படக்குழுவினர் என்ன செய்வது எனத் தெரியமால் முழித்து வருகிறார்களாம். 
 
சிம்பு படம் என்றாலே பிரச்சனைதானா?...


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சமூக வலைதளங்களில் நடிகர் நடிகைகளின் படங்கள்; கொந்தளித்த ஸ்ருதி

சமூக வலைதளங்களில் பலர் தங்கள் படத்திற்கு பதிலாக நடிகர், நடிகைகளின் படங்களை முகப்பு ...

news

‘தாதா 87’ படத்தில் இணைந்து நடிக்கும் சாருஹாசன், ஜனகராஜ்...

நடிகர் ஜனகராஜ் மற்றும் சாருஹாசன் ஆகிய இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர்.

news

என்னை நடிகையாக பார்க்காமல் ஒரு பெண்ணாக பாருங்கள்: கதறும் மைனா நந்தினி

என்னை நடிகையாக பார்க்காமல், ஒரு பெண்ணாக பார்த்து நிம்மதியாக வாழ விடுங்கள் என மைனா நந்தினி ...

news

கவிப்பேரரசு மீது வருத்தத்தில் இருக்கும் இயக்குநர்

இயக்குநரை புகழ்ந்து தள்ளிய கவிஞர் தற்போது தேசிய பெற்ற பின் அந்த இயக்குநரை பற்றி ஒரு ...

Widgets Magazine Widgets Magazine