Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓவியாவை திருமணம் செய்து கொள்ள விருப்பமா? - நடிகர் சிம்பு விளக்கம்


Murugan| Last Modified திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (16:19 IST)
நடிகர் ஓவியாவை திருமணம் செய்து கொள்வதாக, தான் டிவிட்டரில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என நடிகர் சிம்பு விளக்கம் அளித்துள்ளார்.

 

 
ஆரவ் தன்னுடைய காதலை ஏற்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.  அதனையடுத்து அவருக்கு ஆதரவாக டிவிட்டரில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்நிலையில், ஓவியா திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என நடிகர் சிம்பு விருப்பம் தெரிவித்ததாக ஒரு செய்தி இணையத்தில் வெளியானது. அந்த செய்தியை பல ஊடகங்களும் பதிவு செய்தன.
 
இந்நிலையில், இதுபற்றி விளக்கம் அளித்து நடிகர் சிம்பு பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகங்களுக்கு ஒரு செய்தி அனுப்பியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
''எனது பெயரை களங்கப்படுத்த சிலர் துடிக்கின்றனர் என்ற செய்தி எனக்கொன்றும் புதிதல்ல. இவற்றையெல்லாம் மீறி வெற்றி காண்பவன் நான். ஆனால் நான் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையை பற்றி தனிப்பட்ட ட்வீட் ஒன்றை போட்டேன் என்பது முற்றிலும் பொய்யான, உண்மைக்கு மாறான, எனது மனதை புண்படவைக்கும் செய்தி. பொறுப்பற்ற சிலர் எனது பெயரில் போலியான சமூக ஊடக  அக்கௌன்ட் மூலம்  இது போன்று ட்வீட் செய்வது எனக்கு ஆச்சிரியமளிக்கவில்லை.
 
ஆனால் இந்த உண்மையற்ற, போலியான செய்தியை சில ஊடகங்கள் நம்பி, அதனை வெளியிடுவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. எந்த ஒரு ஊடகத்துக்கும்  

உண்மையான செய்தியை பொறுப்புடன் தருவதே முதன்மை  காரியமாக இருக்க வேண்டும் என்பதை நம்புபவன் நான். இது போல் என் பெயரால் போலியாக உருவாக்கப்பட்டுள்ள அக்கௌண்ட்டுகளால்  பரப்பப்படும் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் எனது தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக வரும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுமாறு அனைத்து ஊடக நண்பர்களை பணிவுடன்  கேட்டுக்கொள்கிறேன் ''.

 
இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :