முழுக்க முழுக்க செல்போனிலேயே எடுக்கப்பட்ட ’அகண்டன்’ -டூலெட் நாயகனின் வித்தியாச முயற்சி!
நடிகர் சந்தோஷ் நாராயணன் அகண்டன் எனும் திரைப்படத்தை முழுக்க செல்போனிலேயே படம் பிடித்துள்ளார்.
கொரோனா காரணமாக காலம் காலமாக படம்பிடித்து வந்ததை போல கூட்டமாக சென்று படம் பிடிப்பது இப்போது இயலாத காரியமாகி விட்டது. இந்நிலையில் செலவைக் குறைக்கவும் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையிலும் வித்தியாசமாக பல படங்கள் எடுக்கப்படுகின்றன.
அந்த வகையில் முழுக்க முழுக்க செல்போனிலேயே (ஐபோன் 11 ப்ரோ) ஒரு படத்தை எடுத்து முடித்துள்ளார் நடிகர் சந்தோஷ் நம்பிராஜன். இவர் செழியன் இயக்கி விருதுகளைப் பெற்ற டுலெட் படத்தில் கதாநாயகனாக நடித்தவர். இந்தப் படத்துக்கு சண்டி வீரன் புகழ் அருணகிரி இசையமைத்துள்ளார். இந்த கதை இந்தியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா அகிய மூன்று நாடுகளில் நடக்கும் விதம் படமாக்கப்பட்டுள்ளதாம்.