செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வியாழன், 1 ஜூன் 2017 (17:13 IST)

ராஜேஷ் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சந்தானம்...

இயக்குனர் ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் சந்தானம் ஹீரோவாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


 

 
இயக்குனர் ராஜேஷ் இயக்கிய முதல் படம்  ‘சிவா மனசுல சக்தி’. அந்த படத்திலேயே காமெடி காட்சிகளில் கலக்கியிருந்தார் சந்தானம். அதன் பின் ராஜேஷின் அடுத்த படமான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஆர்யாவோடு அவர் அடித்த லூட்டியை தமிழ்நாடே ரசித்தது. அதன் பின் நம்பர் ஒன் காமெடி நடிகனாக மாறினார் சந்தானம். மேலும், ராஜேஷ் இயக்கிய அடுத்தடுத்த படங்களில் தவறாமல் இடம் பெற்றார் ராஜேஷ். 
 
ஆனால், இனிமேல் கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என முடிவெடுத்த சந்தானம், தற்போது சில படங்களில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், ராஜேஷ் அடுத்து இயக்கும் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் எனத் தெரிகிறது. ராஜேஷ் கூறிய கதை சந்தானத்திற்கு பிடித்துப் போக உடனே ஓகே சொல்லி விட்டாராம். இந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக தெரிகிறது.