செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 25 அக்டோபர் 2024 (09:56 IST)

நடிகர் ரியாஸ் கான் மூத்த மகனான ஷாரிக் ஹாசன் பேட்டி.....

பிரபல நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கானின் மூத்த மகனான ஷாரிக் ஹாசன்மரியா ஜெனிஃபர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
 
இவர்களின் திருமணம் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நிலையில், இருவரும் முதலில் சந்தித்தது, காதலித்தது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினர்.
 
அப்போது பேசிய ஷாரிக் ஹாசன்.....
 
நான் சினிமா வாய்ப்புக்காக நான்கு ஆண்டுகளாக சாலிகிராமத்தில் இருந்தேன். இதையடுத்து, ஈசிஆருக்கு சென்று அப்பா, அம்மாக்கூட இருக்கலாம் என நினைத்து அங்கு சென்றேன். அப்போது, தான் அங்கு ஒரு ஜிம்முக்கு சென்றேன். அந்த ஜிம்மில் தான் நான் முதன் முதலில் மரியாவை சந்தித்தேன். 
 
முதன் முதலில் நான் பார்த்து சிரித்தேன். ஆனால், என்னைப் பார்த்து கண்டுக்கவே இல்லை. அப்போதான் யாருடா இது, நம்மல மதிக்கவே இல்லையேனு நினைச்சேன்.
 
அப்போது தான் கல்யாணம் பண்ணா இந்த பொண்ணைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்து, தினம் தினம் ஜிம்முக்கு போய் பார்த்துக்கிட்டே இருந்தேன். 
 
அதன் பின், ஒரு நாள் ரெஸ்டாரண்டில் எதேர்ச்சையாக இவங்களைப் பார்த்தேன் அதன்பிறகுதான் பேச ஆரம்பித்தோம்.
 
இதைதொடர்ந்து பேசிய மரியா....
 
முதல் திருமண வாழ்க்கை சரியாக அமையாததால், நான் இரண்டாவது திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை. என் மகள் ஜாரா சந்தோஷமா இருக்கனும் என்று அவளைபத்தி மட்டும் தான் யோசித்தேன். ஜிம்மில் ஷாரிக், என்கூட மட்டுமில்ல எல்லாரிடம் நல்ல ஜாலியாகத்தான் பேசுவார் என்பதால், பத்தோட பதினொன்னு எல்லாரிடமும் பேசுவது போலத்தான் என்னிடமும் பேசுகிறார் என்று நினைத்தேன். மற்றவர்கள் ஷாரிக் பற்றி என்னிடம் பேசும் போது, அவன் சின்ன பையன், தம்பி என்று தான் சொல்லி இருக்கேன். ஆனால், ஷாரிக் எப்படியோ மயக்கி ஸ்கெட்ச் போட்டு தூக்கிட்டான்.
 
நானும் ஜாராவும் தனியாகத்தான் இருந்தோம், எனக்கு பெருசா ஏதோ மிஸ் பண்ண மாதிரி தெரியல. ஆனால், ஷாரிக் என் வாழ்க்கையில் வந்த பிறகு தான், நான் வாழ்க்கையில் எதை மிஸ் பண்ணேன் என்று தெரிகிறது. அப்போது தான் ஜாராவிற்கு ஒரு அப்பா வேண்டும் என்று நினைத்தேன், அதற்கு தகுதியானவராக ஷாரிக் இருந்தார். எங்களுடைய காதல் வாழ்க்கை ஆரம்பிக்க காரணமே ஜாரா தான் என்று  கூறியுள்ளார்.