வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (17:38 IST)

’வாரிசு’ படப்பிடிப்புக்கு சென்று அசிங்கப்பட்டேன்: சீரியல் நடிகர் வேதனை!

Varisu Poster
வாரிசு படத்திற்கு நடிக்கச் சென்று அசிங்கப்பட்டு உள்ளதாக சீரியல் நடிகர் ஒருவர் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் தமன் இசையில் உருவாகி வரும் ’வாரிசு’  படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
 
இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடித்த ரவிச்சந்திரன் என்பவர் அழைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு மேக்கப் எல்லாம் போட்டு படப்பிடிப்பு தொடங்க தயாரான நிலையில் திடீரென அவர் வேண்டாம் என்று இயக்குனர் வம்சி கூறிவிட்டதாக தெரிகிறது 
 
இதனால் நொந்துபோன ரவிசந்திரன் இதை விஜய்யுடன் சொல்லப் போவதாக கூறியதை அடுத்து படக்குழுவினர் அவரை சமாதானப்படுத்தி அன்றைய தினத்தின் சம்பளத்தையும் கொடுத்து அனுப்பி வைத்ததாக தெரிகிறது 
 
நடிக்க அழைத்து மேக்கப் எல்லாம் போட்ட பிறகு வேண்டாம் என்று கூறியது தன்னை அசிங்கப்படுத்தி விட்டதாக ரவிச்சந்திரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்