வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 2 மார்ச் 2023 (11:35 IST)

என் பெயரில் போலிக் கணக்கு… பிரபல தமிழ் நடிகர் போலீஸில் புகார்!

ஆசை ஆசையாய், மிளகா போன்ற திரைப்படங்களை இயக்கிய ரவி மரியா. ஆனால் இயக்கத்தில் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இலலாததால், நடிப்பில் கவனம் செலுத்தினார். ஜில்லா, மனம் கொத்தி பறவை, துப்பறிவாளன் மற்றும் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ஆகிய படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது. இப்போது இயக்கத்தை கைவிட்டு முழுமூச்சாக நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய பெயரில் போலியாக சமூகவலைதளக் கணக்கு தொடங்கப்பட்டு அதன் மூலமாக பண மோசடி செய்வதாக சென்னை தென்மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அந்த புகாரில் “போலியான அந்த கணக்கை பாலோ செய்தவர்கள் சிலரிடம் 10000 ரூபாய் பணம் கேட்டு செய்தி அனுப்பிய நிலையில், பலர் அது நான்தான் என நம்பி பணத்தை அனுப்பிவிட்டதாகவும், இதையடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது. அவரின் புகாரை ஏற்ற சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.