1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (10:48 IST)

திரை விழா மேடையில் அனைவரையும் கவர்ந்த ராம்கி!

நடிகர் ராம்கி சமீபத்தில் ஆர் கே சுரேஷ் நடுத்துள்ள வேட்டை நாய் படத்தில் நடித்துள்ளார்.

தயாரிப்பாளரான ஆர் கே சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் வேட்டைநாய். இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்துள்ள நிலையில் இந்த படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .இயக்குனர் ஜெய்சங்கர் இயக்கிய இந்தப் படத்திற்கு ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு கணேஷ் சந்திரசேகரன் என்பவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்கே சுரேஷ் ஜோடியாக சுபிக்‌ஷா நடித்திருக்கும் இந்தப் படம் அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இந்த படம் ஆர்கே சுரேஷ் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர் ராம்கி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் சம்மந்தமான விழா ஒன்றில் கலந்துகொள்ள அவர் வந்தபோது அவரின் கெட்டப் அனைவரையும் கவர்ந்தது. நடிகர் அஜித் போல சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அவர் விழாவில் கலந்துகொண்டார்.