செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வெள்ளி, 24 ஜூலை 2020 (18:00 IST)

சொகுசுக் காரில் சென்ற நடிகர் ரஜினிக்கு அபராதம் ! ரசிகர்கள் அதிர்ச்சி

சில தினங்களுக்கு முன்பு தனது பண்ணைக்கு வீட்டுக்கு சென்ற ரஜினி -பாஸ் எடுத்தாரா என்பது சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் அவர் இன்று -பாஸ் எடுத்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

கடந்த 20 ஆம் தேதி தினம் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு ரஜினி தனது லம்போகினி காரை தானே ஓட்டி சென்றது ட்ரெண்டானது. இந்நிலையில் அவர் கேளம்பாக்கம் செல்ல இ-பாஸ் எடுத்தாரா என்ற கேள்வி எழுந்தது. ரஜினி இ-பாஸ் பெற்றாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று தனது கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு மீண்டும் புறப்பட்டுள்ளார் நடிகர் ரஜினி. இதற்காக முறையாக அவர் இ-பாஸ் பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக செல்வதாக இ-பாஸ் அவர் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் ரஜினி தனது சொகுசு காரில் மாஸ்க் அணிந்து சென்றாலும்கூட அவர் சீட் பெல்ட் அணியாததற்காக தற்போது அவருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 26 ஆம் தேதி அபராதம் செலுத்தியதற்கான ரசீது விவரங்கள் வெளியான நிலையில், தாழம்பூர் காவல்துறையினர் இந்த  நடவடிக்கை எடுத்துள்ளனர்.