திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 20 அக்டோபர் 2020 (13:01 IST)

மணிரத்னம் பட நடிகருக்கு கொரோனா தொற்று: மருத்துவமனையில் அனுமதி

கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வந்தது. இருப்பினும் அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது. 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு திரையுலகினரும் தப்பவில்லை என்பதும் விஷால், தமன்னா உள்பட பல திரையுலக பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் மருத்துவ சிகிச்சை மூலம் அதில் இருந்து மீண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மணிரத்னம் பட நடிகருக்கு கொரோனா தொற்று
இந்த நிலையில் தற்போது பிரபல தமிழ், மலையாள நடிகர் பிருத்விராஜ்க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 
 
மணிரத்னம் இயக்கிய ’ராவணன்’ பாக்யராஜ் இயக்கிய ’பாரிஜாதம்’ உள்பட பல தமிழ் படங்களிலும் பிரித்விராஜ் நடித்து உள்ளார் என்பது தெரிந்ததே