புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : செவ்வாய், 18 ஜனவரி 2022 (16:38 IST)

மரணத்தை விட கொடுமையானது விவாகரத்து: பிரபல நடிகர் பேட்டி!

விவாகரத்து செய்வது மரணத்தை விட கொடுமையானது என பிரபல நடிகர் ஒருவர் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகாபாரதம் என்ற தொடரில் கிருஷ்ணர் வேடத்தில் நடித்தவர் நிதிஷ் பரத்வாஜ்
 
இவர் தனது முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி என இரண்டு முறை விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திரையுலக பிரபலங்களின் கருத்து குறித்து அடிக்கடி செய்தி வெளிவந்து கொண்டு வந்து கொண்டிருப்பது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த நிதிஷ் பரத்வாஜ் காதலித்துக் கைப்பிடித்த மனைவியை விவாகரத்து செய்வது என்பது மரணத்தை விட கொடுமையானது என்றும் அந்த கொடுமையை தான் இரண்டு முறை அனுபவித்து உள்ளதாகவும் கூறினார் 
 
மேலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் தற்காலிகமாகப் பிரிந்து அதன்பின் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யலாம் என்றும் விவாகரத்து முடிவை எடுக்க முன் பலமுறை யோசியுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்