திங்கள், 30 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 29 மார்ச் 2023 (08:24 IST)

சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் நெப்போலியன்

விஜய்சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணியில்  தென் மேற்குப்பருவக்காற்று, இடம் பொருள் ஏவல் மற்றும் தர்மதுரை ஆகியப் படங்களுக்கு அடுத்து உருவான படம் மாமனிதன். இந்த படம் திரையரங்க வெளியீட்டில் ஹிட் ஆகவில்லை என்றாலும், உலக அளவில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் சீனு ராமசாமி அடுத்து ஜி வி பிரகாஷ் நடிப்பில் இடி முழக்கம் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதையடுத்து அவர் அமெரிக்காவில் நடக்கும் விதமான கதை ஒன்றை படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் நெப்போலியன் மற்றும் நந்திதா தாஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அந்த படத்துக்கான லோகேஷன் தேடும் பணிகளில் சீனு ராமசாமி ஈடுபட்டு வருகிறார்.