1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 12 ஜூலை 2024 (11:16 IST)

வீடியோ காலில் நடந்த நடிகர் நெப்போலியனின் மகன் நிச்சயதார்த்தம்!

தமிழ் சினிமாவில் 90 களில் வில்லனாக அறிமுகமாகி பிறகு கதாநாயகனாக உச்சம் தொட்டு மீண்டும் குணச்சித்திர வேடத்துக்கு மாறிக் கலக்கியவர் நெப்போலியன். தனது மகனின் உடல்நிலை மற்றும் அதன் சிகிச்சைக் காரணமாக இப்போது அமெரிக்காவில் தங்கி வருகிறார்.

இதனால் அவர் தனக்கு வந்த பல வாய்ப்புகளை இழந்துள்ளார். ஆனால் அங்கு சென்று இதுவரை நான்கு ஹாலிவுட் படங்களில் நடித்துமுடித்துள்ளார். இந்நிலையில் தமிழ் சினிமாவுடன் இருக்கும் தொடர்பு விடுபட்டு போய்விட கூடாது என்பதற்காக ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் தமிழில் நடிக்கிறார்.

இந்நிலையில் அவரின் மூத்த மகன் தனுஷுக்கு இப்போது திருமண நிச்சயதார்த்தம் வீடியோ காலில் நடந்துள்ளது. தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரால் விமானத்தில் நீண்ட நேரம் பயணிக்க முடியாது. அதனால் அவர் அமெரிக்காவிலேயே இருக்க நெப்போலியன் குடும்பத்தினர் திருநெல்வேலியில் இருக்கும் மணப்பெண் வீட்டில் இருந்தபடி நிச்சயதார்த்ததை முடித்துள்ளனர்.

விரைவில் அவர்கள் திருமணம் அமெரிக்காவில் நடக்கும் என சொல்லப்படுகிறது.