செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 9 ஜனவரி 2023 (09:57 IST)

அப்போதில் இருந்து இப்போதுவரை…சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு போட்டி – மோகன் பதில்!

சமீபத்தில் நடந்த வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட படக்குழுவினர் அனைவரும் நடிகர் விஜய்யை புகழ்ந்து பேசினர். அப்போது பேசிய சரத்குமார் “சூர்யவம்சம் படத்தின் 175 ஆவது நாள் விழாவில் பேசும் போது விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என நான் சொன்னேன். அப்போது அதைக் கேட்ட கலைஞரே வியந்தார். இப்போது விஜய் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். நான் அன்று சொன்னது இன்று பலித்துவிட்டது” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்களைக் கோபமாக்கியது.

சரத்குமாரின் இந்த சர்ச்சைப் பேச்சை தொடர்ந்து பலரும் தங்கள் கருத்தை சொல்லி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் மோகனிடம் இதுபற்றி கேட்ட போது “இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து அப்போது இருந்து இப்போது வரை போட்டி உள்ளது. பல ஸ்டார்கள் இருக்கலாம். பட்டம் யாரிடமோ உள்ளதோ அவர்தான் சூப்பர் ஸ்டார். அது ரஜினி சாரிடம்தான் உள்ளது” எனக் கூறியுள்ளார்.