Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மும்பை பட விழாவில் கலந்து கொள்வார் ; பொதுக்குழுவிற்கு வரமாட்டார் : ரஜினியை வம்புக்கிழுத்த மன்சூர் அலிகான்


Murugan| Last Modified வியாழன், 1 டிசம்பர் 2016 (13:51 IST)
நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கடந்த கடந்த மாதம் 27ம் தேதி, நடிகர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

 


அப்போது சிலர் விஷால் மற்றும் கருணாஸ் ஆகியோரின் கார் கண்ணாடியை உடைத்தனர். தள்ளுமுள்ளு, தடியடி நடந்து களபரமானது. இது தொடர்பாக சிலர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
 
இந்த பொதுக்குழுவில் நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன், விஜய், அஜீத் போன்றவர்கள் கலந்து கொள்ளவில்லை. ஆனால், கமல் மட்டும் ஸ்கைப் வழியாக நிர்வாகிகளிடம் பேசினார்.
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நடிகர் மன்சூர் அலிகான் “ ரஜினி மும்பைக்கு சென்று அவரின் பட விழாவில் கலந்து கொள்கிறார். ஆனால், சென்னையில் நடக்கும் நடிகர் சங்க பொதுக்குழுவில் கலந்து கொள்ள வரமாட்டார்.
 
நான் சாதாரண நடிகன். இந்த சினிமாத்துறைதான் எனக்கு சோறு போடுகிறது. அதனால் நான் நாணயமாக நடந்து கொள்கிறேன். அது போல் மற்றவர்களும் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் எல்லாம் பெரிய நடிகர்கள் ஆகி விட்டார்கள். உடம்பு சரியில்லை என பல காரணங்கள் சொல்வார்கள்” என கூறினார். 


இதில் மேலும் படிக்கவும் :