Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நடிகர் மாதவன்!

ரஜினிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் நடிகர் மாதவன்!


Caston| Last Modified வியாழன், 18 மே 2017 (15:54 IST)
நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என ஆதரவும், எதிர்ப்பும் தமிழகத்தில் நிலவி வருகிறது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் கருத்தை கூறி வருகின்றனர்.

 
 
இந்நிலையில் நடிகர் மாதவன் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார். 9 வருடங்களுக்கு பின்னர் ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினிகாந்த் அந்த சந்திப்பின் போது அரசியல் பிரவேசம் குறித்து பேசியது தான் தமிழகத்தில் ஹாட் டாப்பிக்காக உள்ளது.
 
நான் அரசியலுக்கு வரமாட்டேன் என நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள் என ரஜினி கூறியது தான் அவர் அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இதனையடுத்து அவரது அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில் மேடி என அழைக்கப்படும் நடிகர் மாதவன் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கூறுகையில், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து என்னிடம் கருத்து கேட்கப்படுகிறது. தமிழக மக்கள் புத்திசாலிகள். அவர்களுக்கு நல்லது எது என நன்றாக தெரியும். ரஜினி அரசியலுக்கு வந்தால் நல்லது. அவர் முடிவை நான் வரவேற்கிறேன் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :