Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓபிஎஸ்ஸை சந்தித்தது ஏன்? - விளக்கம் கூறும் லாரன்ஸ்

bala| Last Updated: புதன், 15 பிப்ரவரி 2017 (13:43 IST)
அரசியல்வாதிகளும், வேறு பல பிரமுகர்களும் ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடிகர் லாரன்சும் அவரை சந்தித்தார். அவர் ஓபிஎஸ்ஸுக்கு அப்போது ஆதரவு தெரிவித்ததாக கூறிய நிலையில், இந்த சந்திப்பு குறித்து லாரன்ஸ் விளக்கமளித்துள்ளார்."நண்பர்கள், ரசிகர்களுக்கு வணக்கம். நான் எந்த அரசியல் கட்சியை ஆதரிப்பவனும் அல்ல. ஒரு கட்சியை ஆதரிக்கும் அளவுக்கு பெரிய நட்சத்திரமும் அல்ல. நான் ஜல்லிக்கட்டு கொண்டாட்டத்தைப் பற்றி முதல்வர் பன்னீர்செல்வத்திடம் சொன்ன போது அவர் உடனே அதற்கு ஒப்பதல் தந்தார்.

அவரை சந்தித்தது அதற்கு நன்றி தெரிவிக்கவே. ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு எனது ஆதரவைத் நான் தெரிவிக்கவில்லை. எனக்கு எந்த அரசியல் தொடர்பும் கிடையாது. இதை கவனத்தில் கொள்ளுமாறு ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறேன்."

- இவ்வாறு தனது பேஸ்புக் பக்கத்தில் லாரன்ஸ் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :