புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (16:28 IST)

நகைச்சுவை நடிகர் கோவை செந்தில் மரணம்...

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ள நடிகர் கோவை செந்தில் இன்று காலை மரணமடைந்தார்.

 
திரைப்பட  நடிகர் குமாரசாமி (என்கிற ) கோவை செந்தில் (74) உடல்நல குறைவால் இன்று காலை  கோவை வடவள்ளியிலுள்ள தனியார் மருத்துவ மனையில்  காலமானார்.  
 
அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. நடிகர்  சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் 
 
"கே.பாக்யராஜ் இயக்கத்தில்  வெளிவந்த “ஒரு கை ஓசை”,  “இது நம்ம ஆளு”, ”ஆராரோ ஆரிரரோ”, வெளிவந்த ”என் ரத்தத்தின் ரத்தமே”,  “பவுனு பவுனுதான்”, “அவசர போலீஸ் 100” மற்றும் "படையப்பா","கோவா"   உட்பட ஏராளமான படங்களில்  நடித்து  குணச்சித்திர நடிகராகவும்  நகைச்சுவை  நடிகராகவும் தனி முத்திரை பதித்து பிரபலமானவர் குமாரசாமி என்கின்ற கோவை செந்தில்.  
 
அவரது மறைவு திரைத்துறைக்கும் நடிகர் சமூகத்துக்கும்   மாபெரும் இழப்பாகும். அன்னாரது மறைவால் துயரத்த்தில்  ஆழ்ந்திருக்கும் குடும்பத்தாரின் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தி அடையவும் பிராத்திக்கிறோம்"  என குறிப்பிடப்பட்டுள்ளது.