திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 22 மார்ச் 2023 (14:13 IST)

இறந்து விட்டதாக பரவிய செய்திக்கு வீடியோவில் பதிலளித்த மூத்த நடிகர்!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கோட்டா சீனிவாசராவ். மூத்த நடிகரான இவருக்கு திரைத்துறையினர் இடையே நல் மதிப்பு உள்ளது. இவர் இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் வில்லன் வேடங்களில் நடித்து மிரட்டிய கோட்டா சீனிவாசராவ் பாஜகவில் இணைந்து சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் கோட்டா சீனிவாசராவ் இறந்துவிடதாக வதந்திகள் பரவின. அதை மறுத்துள்ள கோட்டா சீனிவாசராவ் வீடியோவில் தோன்றி ” என்னை சமூகவலைதளங்கள் கொன்றுவிட்டன. இந்த வதந்தியை நம்பவேண்டாம். மேலும் இதுபோல வதந்தியைப் பரப்புவர்களுக்கு மக்கள் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.