1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 22 ஜூன் 2023 (13:00 IST)

"டாடா" படத்தால் டாப் ஹீரோ ரேஞ்சுக்கு வளர்ந்த கவின் - சொத்து மதிப்பு கோடியில் புரளுதேப்பா!

ஒருவரின் வளர்ச்சி நமக்கும் மகிழ்வைத் தரணும்னா அதுல ரசனை தாண்டியும் ஒரு கனிவும், அக்கறையும் இருக்கணும். கவினின் வளர்ச்சி நம்ம நட்பில் ஒருவரோட வளர்ச்சியைப் போல மகிழ்வைக் கொடுக்குது. குறைகளைக் களைந்து நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து இன்று டாப் ஹீரோவாக வளர்ந்திருக்கிறார். 
 
இவர் விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3-வது சீசனில் பங்கேற்று மாபெரும் பிரபலடைந்தார். சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிக்பாஸ் வாய்ப்பை கைப்பற்றிய இவர் பிக்பாஸில் நுழைந்த ஆரம்பத்தில் சாக்ஷி,     அபிராமி , லாஸ்லியா என ஒருவரையும் விட்டு வைக்காமல் காதலில் விழுந்தார்.
 
பின்னர் லாஸ்லியாவுடன் நெருங்கி பழகி கிசுகிசுக்கப்பட்டார். அந்நிகழ்சச்சிக்கு பிறகு தொடர்ந்து அவரவர் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர். நட்புன்னா என்னான்னு தெரியுமா, டாடா உள்ளிட்ட படத்தில் நடித்துள்ளார்.

இதில் டாடா திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்து வசூல் வாரி குவித்தது. நடிச்சது ரெண்டு படமா இருந்தாலும் கோடியில் சொத்து வைத்திருக்கிறாராம். சென்னை ஒரு பிளாட் , சொகுசு கார் என 
கவினின் சொத்து மதிப்பு சுமார் 5 முதல் 7 கோடி ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகிறது. கவின் டாடா படத்திற்கு பிறகு  1.5 கோடி முதல் ரூ. 2 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். அவரின் ஆண்டு வருமானம்  ரூ. 1 கோடி வரை இருக்குமாம்.