Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சின்னத்திரைக்கு வருகிறாரா கமல்ஹாசன்? - பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில்?


Murugan| Last Modified சனி, 15 ஏப்ரல் 2017 (17:46 IST)
நடிகர் கமல்ஹாசன் சின்னத்திரையில் நிகழ்ச்சி ஒன்றை உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 

 
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் தனது வீட்டின் மாடிப்படியிலிருந்து கீழே விழுந்ததில் அவருக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது. அதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்ட நாட்கள் அவர் சிகிச்சை எடுக்க வேண்டியிருந்ததால், அவர் அப்போது நடித்து வந்த சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. 
 
தற்போது அவர் முழுமையாக குணமடைந்து விட்டாலும், சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவில்லை. இந்நிலையில் தொலைக்காட்சியில் அவர் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
 
ஹிந்தி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தமிழில் நடத்த ஒரு தொலைக்காட்சி நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகவும், அந்த நிகழ்ச்சியை நடத்த அந்த நிறுவனம் நடிகர் கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாகவும் செய்தி வெளியாகவுள்ளது. 
 
ஆனால், இதுபற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :