மகாபாரத தொடரில் நடித்த பிரபல நடிகர் காலமானர்!
மகாபாரத தொடரில் சகுனி மாமாவாக நடித்திருந்த பழம்பெரும் நடிகர் குபி பைந்தல் உடல்நலக்குறைவால் காலமானார்.
தொலைக்காட்சியில் வெளியான மகாபாரத தொடரில் சகுனி மாமாவாக நடித்தவர் பழம்பெரும் நடிகர் குபி பைந்தல் (79). இவர், சினிமாவில் நடித்ததுடன், பகதூர் ஷா ஜாபர் மகாபாரதம், கனூன், ஓம் நமசிவாய, சிஐடி, ஜெய் கனியா லால் கி உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தார். இந்த நிலையில், இவர் இன்று உடல் நலக்குறைவால் காலமானார்.
கடந்த மே மாதம் 31 ஆம் தேதி உடல்நிலை மோசமடைந்த நிலையில், குபி பைந்தல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் அவரது உடல் நலம் குன்றியது.
இதுகுறித்து, அவரது சகோதரும், முன்னணி காமெரி நடிகருமான பைந்தல் மீடியாக்களிடம் கூறினார்.
இந்த நிலையில், இன்று காலையில் சிகிச்சை பலனின்றி குபி பைந்தல் காலமானார்.