செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (06:33 IST)

HBD நடிகர் தாமு: ரசிகர்கள் வாழ்த்து!

நடிகர் மற்றும் சமூக சேவையாளர் தாமு அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்
 
கே பாலச்சந்தர் இயக்கிய வானமே எல்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் தாமு. அதன்பின்னர் விஜய் நடித்த முதல் திரைப்படமான நாளைய தீர்ப்பு என்ற படத்தில் உள்பட பல திரைப்படங்களில் நடித்து வந்தார்
 
காதலன், புதியமன்னர்கள், ஆசை, வான்மதி, நேருக்கு நேர், உல்லாசம், காதல் மன்னன், அவள் வருவாளா, உள்பட அஜித் விஜய் நடித்த பல படங்களில் அவர் நடித்துள்ளார். குறிப்பாக அவர் கில்லி படத்தில் நடித்த ஓட்டேரி நரி என்ற கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் உதவியாளராக சுமார் 7 ஆண்டுகள் பணிபுரிந்தார் என்பதும் அதன் பின்னர் குழந்தைகள் கல்விக்காக அவர் கடந்த சில ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் தாமுவுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்