தமிழ் சினிமா என்னை மறந்து விட்டது : சின்னி ஜெயந்த் வேதனை

தமிழ் சினிமா என்னை மறந்து விட்டது : சின்னி ஜெயந்த் வேதனை


Murugan| Last Modified வெள்ளி, 28 அக்டோபர் 2016 (10:19 IST)
தமிழ் சினிமா தன்னை மறந்து விட்டது காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

 

 
கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சின்னி ஜெயந்த். காமெடி மட்டுமின்றி, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் அவர் நடித்துள்ளார். ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் சினிமாவில் நடிப்பதில்லை. 
 
இந்நிலையில், இயக்குனர் பிரபு சாலமன் தயாரிப்பில் அன்பழகன் என்பவர் இயக்கியுள்ள ‘ரூபாய்’ படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 
 
அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சின்னி ஜெயந்த் “ இயக்குனர் மகேந்திரன் இயக்கிய ‘ கை கொடுக்கும் கை’ படத்தின் மூலம், நான் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனேன். அதன்பின் பல படங்களில் நடித்துள்ளேன். சமீபகாலமாக எனக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தமிழ் சினிமா என்னை மறந்துவிட்டது. வாய்ப்பு கொடுத்த மகேந்திரன் எனக்கு தாய் போன்றவர் எனில், மறு வாய்ப்பு கொடுத்த இயக்குனர் பிரபு சாலமன் எனக்கு தந்தை போன்றவர்” என்று உருக்கமாக பேசினார்.


இதில் மேலும் படிக்கவும் :