1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 11 ஜூலை 2017 (00:36 IST)

பைத்தியமாக மாறிய பரணி: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றம்

விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி முட்டாள்தனத்தின் உச்சகட்டமாகி வருகிறது. நேற்று வரை நன்றாக சகஜமாக பேசிக்கொண்டிருந்த நடிகர் பரணியை திடீரென இன்று பைத்தியக்காரன் போல் காட்டுவதாக நெட்டிசன்கள் புகார் கூறியுள்ளனர்.



 
 
மேலும் உலகின் மிகப்பெரிய புரணி பேசும் இல்லமாகவும் பிக்பாஸ் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. எந்த நேரமும் யாரையாவது யாரோ ஒருவர் புரணி பேசிக்கொண்டே இருக்கின்றார். இதில் ஆர்த்தியும், காயத்ரியும் கொஞ்சம் ஓவராக கொடுத்த காசுக்கு மேல் கூவுவதாக நெட்டிசன்கள் மிமி கிரியேட் செய்து வருகின்றனர். குறிப்பாக பரணியை தனக்கு தானே பேச வைத்து அவரை உண்மையிலேயே பைத்தியக்காரர்களாக மாற்றிவிட்டதாகவே கருதப்படுகிறது.
 
பிக்பாஸ் விதிமுறைகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுடன் பரணி வெளியேறிய நிலையில் இந்த வாரம் ஜூலி, ஆர்த்தி, ஓவியா மற்றும் வையாபுரி ஆகிய நால்வரில் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.