திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 7 மே 2021 (07:39 IST)

நடிகர் பாலசரவணன் நெருங்கிய உறவினர் கொரோனாவுக்கு பலி: அதிர்ச்சி தகவல்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நேற்று கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்
 
இந்த நிலையில் திரையுலகைச் சேர்ந்த பலர் மற்றும் திரை உலகைச் சேர்ந்தவர்களின் உறவினர்களும் கொரோனாவால் பலியாகி வரும் செய்திகளை அவ்வப்போது அதிர்ச்சியுடன் பார்த்து வருகிறோம் 
 
தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி நகைச்சுவை நடிகர் பாலசரவணன் தங்கை கணவர் காரணமாக கொரோனாவால் இறந்துவிட்டார் என அவர் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
அன்பு நண்பர்களே...இன்று எனது தங்கையின் கணவர் கொரோணா காரணமாக இறந்துவிட்டார்... 32வயது... தயவு கூர்ந்து மிக கவணமாக இருக்கவும்...நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம்...நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும்...முக கவசம் அணிவீ்ர்.