திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (14:51 IST)

''அவர் கவர்ச்சியாக இருந்தார்.''....மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் பாலகிருஷ்ணா

balakrishna
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா. இவர்  நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வீர சிம்ஹா ரெட்டி.

இப்படம் சூப்பர் ஹிட் ஆகி வசூல் குவிதிதுள்ள நிலையில், இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது, பாலகிருஷ்ணாவின் கையில் மதுக்கோப்பையும், அவருடன் நெருக்கமாக நடிகை ஹனிரோஸ் இருக்கும் புகைப்படமும் வைரலானது.

இதையடுத்து, தெலுங்கு சினிமா முக்கிய பிரபலம் அக்கினேனி நாகேஷ்வர வாய் பெயரைக் குறிப்பிட்டு மரியாதை குறைவாக பேசியதும் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,பவன் கல்யாண் உடனான கலந்துரையாடலின்போது, தன் பழைய விபத்தை பற்றிப் பேசியபோது, அந்த நர்ஸ் கவர்ச்சியாக இருந்ததாக குறிப்பிட்டார்.

பாலகிருஷ்னாவின் இந்தப் பேச்சுக்கும் எதிர்ப்புகள் குவிந்து வருகிறது. இதற்கு பாலகிருஷ்ணா மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.