வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2015 (11:19 IST)

நடிகர் சங்கத்தின் உள்ளே வெளியே விளையாட்டு - மீண்டும் நீக்கப்பட்ட மன்சூர்

நடிகர் சங்கத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று கூறிய மன்சூர் அலிகானை சங்கத்தைவிட்டே நீக்கினார்கள்.
 
அவர் நீதிமன்றத்துக்கு சென்று, மீண்டும் உறுப்பினராக உள்ளே நுழைந்தார். சங்கம் தேர்தலை சந்திக்க இருக்கும் நிலையில், மீண்டும் அவர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 
அது குறித்து சென்னையில் பேட்டியளித்தார் மன்சூர்.
 
"தென்னிந்திய நடிகர் சங்கத்தில் இருந்து என்னை ஏற்கனவே நீக்கியிருந்தார்கள். அதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மீண்டும் உறுப்பினர் ஆனேன். 
 
இப்போது மீண்டும் என்னை நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். அப்படி நீக்கியதன் மூலம் நான் நடிகர் இல்லை என்றாகி விடாது.
 
நடிகர் சங்கத்தில் இல்லையென்றாலும் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் நான் இருக்கிறேன். தயாரிப்பாளர்கள் என் பக்கம் இருப்பார்கள்.
 
நடைபெற இருக்கும் நடிகர் சங்க தேர்தலில், பாண்டவர் அணி வெற்றி பெறும். நடிகர் சங்கம் நல்ல எதிர்காலத்தை நோக்கி போகும்."
 
- இவ்வாறு மன்சூர் அலிகான் கூறினார்.