வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2017 (16:48 IST)

நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் நடிகர் அல்வா வாசு....

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த அல்வா வாசு, உடல் நலம் குன்றி வாழ்நாளின் கடைசி நிமிடங்களை என்ணிக் கொண்டிருக்கிறார்.


 

 
மறைந்த இயக்குனர் மணிவண்ணனிடம் இவர் உதவியாளராக பணிபுரிந்தார். நடிகர் சத்தியராஜ், மணிவண்னன், வடிவேலு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்த படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணசித்திர நடிகராகவும் வலம் வந்தவர் அல்லா வாசு. நடிகர் வடிவேலு சினிமாக்களில் நடிக்காமல் விலகி இருந்த போதிலிருந்தே இவர் அவ்வளவாக சினிவாவில் தலைகாட்டவில்லை...
 
ஏறக்குறைய 900 படங்களுக்கும் மேல் இவர் நடித்துள்ளார்.  கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த 6 மாதமாக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

 
 
இந்நிலையில், அவரின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பிலை என்று தெரிவித்த மருத்துவர்கள், அவரை அழைத்து செல்லுமாறு அவரது உறவினர்களிடம் இன்று காலை தெரிவித்துவிட்டனர். மேலும், அவர் இன்னும் சில நாட்கள் அல்லது மாதங்களே உயிர் வாழ்வார் எனவும் கூறிவிட்டனர். இதை அவரது மனைவி அமுதா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அல்வா வாசுவிற்கு கிருஷ்ண ஜெயந்திகா என்கிற ஒரு மகள் இருக்கிறார்.
இந்த விவகாரம் தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.