நடிகர் அஜித்தின் புதிய திரைப்படம் தீபாவளிக்கு தொலைக்காட்சியில் வெளியீடு!
வரும் தீபாவளி பண்டிகைக்கு அஜித்குமாரின் புதிய திரைப்படமான வலிமை டிவியில் ஒளிபரப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது.
அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில், போனிகபூர் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான படம் வலிமை.
வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து ஜி 5 ஓடிடி தளத்தில் மார்ச் 25 ஆம் தேதி வெளியானது.
இப்படம் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து திரையரங்க ரிலீஸ் முடிந்து ஒரு மாதம் கழித்து ஜி 5 ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
இப்படம் பொன.செ-1. விக்ரம், விஸ்வாசம், ஆகிய படங்களுக்கு அடுத்த இடத்தில் அதிக வசூலீட்டிய படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இந்த நிலையில், வரும் தீபாவளி( அக்டோபர் 23 ஆம் தேதி) ஞாயிற்றுக்கிழமை, ஜீ தொலைக்காட்சியில் இப்படம் ஒளிபரப்பாகிறது. அதே நாளன்று சன் டிவியில் விஸ்வாசம் படம் ஒளிபரப்பாகிறது..
கடந்த, மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஜி தமிழ் தொலைக்காட்சியில் வலிமை படம் முதல் முறையாக ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.
Edited by Sinoj