1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 12 செப்டம்பர் 2023 (18:58 IST)

”தெறிக்க..” ரீ எண்ட்ரி கொடுக்கும் அர்ஜூன்! – ரசிகர்களுக்கு டபுள் “விருந்து”!

Virunthu
லியோ படத்தில் ஹரால்ட் தாஸாக முக்கிய வேடத்தில் தோன்றியுள்ள நடிகர் அர்ஜூன் மீண்டும் ஹீரோவாக ரீ எண்ட்ரி தருகிறார்.



லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் “லியோ”. இந்த படத்தில் ஹரால்ட் தாஸ் என்ற முக்கியமான கதாப்பாத்திரத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடித்துள்ளார். இந்த ஹரால்ட் தாஸ் கேரக்டரின் ப்ரோமோ வெளியான நிலையில் அர்ஜுனுக்கு மீண்டும் மவுசு கூடியுள்ளது.

அந்த ப்ரோமோ வீடியோவிலேயே அர்ஜுன் நடித்த ‘ஏழுமலை’ பட தீம் ம்யூசிக்கை போட்டு ரசிகர்கள் வைப் செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அடுத்ததாக நடிகர் அர்ஜுன் க்ரைம் த்ரில்லர் கதையான ‘விருந்து’ என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படமும் இந்த ஆண்டே வெளியாகிறது. தாமரா கண்ணன் இயக்கியுள்ள இந்த படம் மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது. லியோ ரிலீஸுக்கு பிறகு அர்ஜுனுக்கு கிடைக்கும் புகழ் விருந்து படத்தின் வெற்றிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வனிலேயே பழுவேட்டரையர் பாத்திரம் ஏற்ற சரத்குமார், போர் தொழில் வெற்றிக்கு பிறகு பரம்பொருள் உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருவதுடன், மீண்டும் சில படங்களில் ஹீரோவாகவும் கமிட் ஆகியுள்ளாராம். அதுபோல ஆக்‌ஷன் கிங் அர்ஜுனும் மீண்டும் அடுத்தடுத்து ஹீரோவாக களமிறங்குவார் என எதிர்பார்க்கலாம். 90ஸ் கிட்ஸின் பேமஸ் நாயகர்கள் மீண்டும் ஹீரோக்களாக களமிறங்குவது 90ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K